2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

‘குப்பைகளை வீசினால் சட்ட நடவடிக்கை’

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2020 ஜனவரி 12 , பி.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள முக்கிய கேந்திர நிலையங்களில் குப்பைகளை வீசுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென, அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எல். அமானுல்லாஹ், இன்று (12) தெரிவித்தார்.

அட்டாளைச்சேனைப் பிரதேசத்துக்குட்பட்ட ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை ஆகிய பிரதேசங்களில் கிரமமான முறையில் வீடு வீடாகச் சென்று, பிரதேச சபையால் அன்றாடம் குப்பைகள் அகற்றப்படுவதாகவும் அவர் கூறினார்.

இவ்வாறாகக் குப்பைகளை அகற்றிய பின்னர், மீண்டும் குறிப்பாக, வியாபாரிகள் வீதிகளில் அங்கும் இங்கும் அலங்கோலமான முறையில் குப்பைகள் வீசுப்படுவதால், பிரதேசத்தின் அழகிய தோற்றம் மாசுபடுவதோடு, துர்நாற்றமும் வீசுவதோடு, மக்கள் நோய்களுக்கும் ஆளாகி வருவதாகவும், அவர் கூறினார்.

வியாபார நிலையங்களில் சேருகின்ற குப்பைகளை, ஓர் இடத்தில் சேமித்து வைத்து பாதுகாப்பான முறையில் அகற்ற ​வேண்டுமெனத் தெரிவித்த அவர், இது தொடர்பாக வியாபாரிகளுக்கும் பொது மக்கள்களுக்கு பொது அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும், இதனை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .