2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

காரைதீவில் விபத்து; பிரதேச சபை ஊழியர் பலி

Editorial   / 2020 மார்ச் 16 , பி.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

சகா

காரைதீவில், கல்முனை -  அக்கரைப்பற்று பிரதான வீதியில் நேற்று (15) இடம்பெற்ற விபத்தில், காரைதீவு பிரதேச சபை ஊழியர் சீனித்தம்பி கந்தசாமி (வயது 55) பலியாகியுள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.

இரு பிள்ளைகளின் தந்தையான இவர், விபத்தையடுத்து கவலைக்கிடமான நிலையில், சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளார்.

அக்கரைப்பற்றிலிருந்து கல்முனை நோக்கி வந்த இலங்கைப் போக்குவரத்து பஸ்,   தரிடத்தில் நின்று பயணியை இறக்கிக்கொண்டிருந்தவேளை, பின்னால் வேகமாக வந்த தனியார் பஸ்ஸொன்று, இ.போ.ச பஸ்ஸை முந்திச் செல்லும் போது, வீதியில் மோட்டார் சைக்கிளில்  சென்றுகொண்டிருந்த பிரதேச சபை ஊழியரை மோதித்தள்ளியுள்ளதாக, பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையிலிருந்து தெரியவருகிறது.

இதனையடுத்து, தனியார் பஸ்ஸின் உரிமையாளரைக் கைதுசெய்து, தடுத்துவைக்கப்பட்டுள்ள சம்மாந்துறைப் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .