அஸ்லம் எஸ்.மௌலானா / 2019 நவம்பர் 22 , பி.ப. 06:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

கல்முனை மாநகர சபை ஊழியர்களின் நலன்கருதி, கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை ஒழுங்கு செய்திருந்த தொற்றா நோய் பரிசீலனை தொடர்பான இருநாள் மருத்துவ பரிசோதனை முகாம் நேற்று (21) கல்முனை பொது நூலக மண்டபத்தில் ஆரம்பமானது.
கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எம்.எச்.றிஸ்வின் தலைமையில் இடம்பெற்ற இம்மருத்துவ முகாமில், கல்முனை மாநகர சபையில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள்,ஊழியர்கள் பெரும் எண்ணிக்கையானோர் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, உடல் மருத்துவ பரிசோதனைகளுக்குட்பட்டனர்.
இதன்போது கொலஸ்ட்ரோல், இரத்த அழுத்தம், நீரிழிவு, பாலியல் தொற்று, உடல் திணிவுச் சுட்டெண் உள்ளிட்ட விடயங்கள் பரிசோதிக்கப்பட்டதுடன் மருத்துவ ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களும் வழங்கப்பட்டன.
இம்மருத்துவ பரிசோதனைகளில் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஜே.எம்.நிஸ்தார், பொதுச் சுகாதார பரிசோதகர்களான எம்.ஏ.எம்.நியாஸ், ஜே.எம்.நிஜாமுதீன், எம்.ரவிச்சந்திரன், ஐ.எம்.இத்ரீஸ் உட்பட மருத்துவ மாதுக்களும் தாதியரும் மருத்துவ பரிசோதனைப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
இன்று வெள்ளிக்கிழமை இரண்டாவது தொகுதி ஊழியர்களுக்கான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இவ்விருநாள் மருத்துவ முகாம் மூலம் சுமார் 200 ஊழியர்கள் பயன்பெற்றுக்கொண்டனர்.


21 minute ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
4 hours ago
5 hours ago
5 hours ago