Freelancer / 2025 டிசெம்பர் 30 , பி.ப. 10:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு இலங்கையின் முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
இலங்கையின் இறக்குமதிகள் மீதான வரிகளை தற்போதைய நிலைகளிலிருந்து ஒரு வருட காலத்திற்கு 12% ஆகக் குறைக்கக் கோரியே இந்த கடிதத்தை எழுதியுள்ளார்.
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமெரிக்க அரசாங்கம் வழங்கிய உதவிக்கு முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தனது கடிதத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், நாட்டிற்கும் மக்களுக்கும், குறிப்பாக சிறுவர்களுக்கும் ஏற்பட்ட பேரழிவைக் கருத்தில் கொண்டு, தற்போதுள்ள கட்டண விகிதத்தைக் குறைப்பது குறித்து பரிசீலிக்குமாறு முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும அமெரிக்க ஜனாதிபதியை வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்க அரசாங்கம் கட்டண விகிதத்தைக் குறைக்க ஒப்புக்கொண்டால், அத்தகைய நிவாரணத்தின் வருடாந்த நிதி மதிப்பு, சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கும் ஒரு தவணை நிதியின் மதிப்பை விட அதிகமாக இருக்கும் என்று முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும சுட்டிக்காட்டியுள்ளார். R
1 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago