2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

கல்முனைக்குடி மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 01 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை, கல்முனைக்குடி பிரதேச கரைவலை மீனவர்கள் மிக நீண்டகாலமாக எதிர்நோக்கிவந்த  பிரச்சினையைத் தீர்த்துவைப்பதற்கான நடவடிக்கையை கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர் ரிஷாட் பதியுதீன் எடுத்துள்ளார்.

சுனாமி அனர்த்தம் உள்ளிட்டவற்றால் ஏற்பட்ட கட்டடச் சிதைவுகள் மற்றும் ஏனைய கழிவுகள் கல்முனைக்குடி பிரதேசக் கடலில் காணப்படுகின்றன. இதனால், மீனவர்கள் சிரமத்தை எதிர்நோக்குவதாகவும் இக்கழிவுகளை அகற்றுவதற்கான நடவடிக்கையை எடுக்குமாறு பல்வேறு தரப்பினரிடமும்  கல்முனைக்குடி மட்டுப்படுத்தப்பட்ட கரைவலை மீனவர் கூட்டுறவுச் சங்கம் கோரிக்கை விடுத்துவந்தது. இருப்பினும், இக்கோரிக்கை இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை.
இந்நிலையில், இம்மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல், கல்முனையிலுள்ள மட்டுப்படுத்தப்பட்ட கரைவலை மீனவர் கூட்டுறவுச் சங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை (31) இரவு நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட அமைச்சரின் நாடாளுமன்ற விவகாரச் செயலாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்முனைத்தொகுதி அமைப்பாளருமான எ.ஆர்.எம்.ஜிப்ரி, இக்கழிவுகளை அகற்றுவதற்கான நடவடிக்கையை அமைச்சர் எடுத்துள்ளதாக தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X