2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

களவாட வந்த கள்வன் அகப்பட்டான்

Administrator   / 2015 ஓகஸ்ட் 26 , மு.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.எம்.றம்ஸான்

வீட்டுக்குள் புகுந்த திருடனை பெண்னொருவர் மடக்கப்பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவமொன்று கல்முனைக்குடி கடற்கரைப் பள்ளி  வீதியில்  இன்று புதன்கிழமை அதிகாலை 3 மணிக்கு இடம்பெற்றுள்ளது.

வீட்டுக்குள் நுழைந்த திருடன் உறங்கிக்கொண்டிருந்த பெண்னின் கழுத்திலிருந்த தங்க சங்கிலியை அறுக்க முற்படுகையிலேயே இவ்வாறு மடக்கிப்படிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து கல்முனை பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் திருடனை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 15 வயதுடையவர் என ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .