2021 மே 06, வியாழக்கிழமை

கவனயீர்ப்பு போராட்டமும் ஊர்வலமும்

Niroshini   / 2015 ஒக்டோபர் 01 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.அறூஸ்

அம்பாறை மாவட்ட மீனவப் பேரவை ஏற்பாடு செய்த சிறுவர் மற்றும் பெண்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான கவனயீர்ப்பு  போராட்டமும் ஊர்வலமும் இன்று வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு அட்டாளைச்சேனை பிரதேச செயலத்துக்கு முன்னால் நடைபெற்றது.

மாவட்ட மீனவ பேரவையின் இணைப்பாளர் கே.இஸ்ஸதீன் தலைமையில் நடைபெற்ற இந்த ஊர்வலம் பிரதான வீதியுடாக அட்டாளைச்சேனை பிரதேச  செயலகத்தை சென்றடைந்தது.

இதனைதொடர்ந்து,பிரதேச செயலகத்துக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

சம்பவ இடத்துக்கு வருகை தந்த அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் வீ.அதிசயராஜ் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்ததுடன் மக்கள் மத்தியிலும் உரையாற்றினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .