2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

கைக்குழந்தையை கடத்திய தம்பதிக்கு பிணை

Suganthini Ratnam   / 2016 மார்ச் 04 , மு.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

இரண்டு மாதக் கைக்குழந்தையைக் கடத்திச் சென்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட  கணவன், மனைவியை  தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப்பிணைகளில் செல்வதற்கு பொத்துவில் நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வாஹாப்தீன், நேற்று  வியாழக்கிழமை அனுமதியளித்துள்ளார்.

இவர்கள் இருவரும் செவ்வாய்க்கிழமை (01) குழந்தையின் வீட்டுக்குச் சென்றிருந்தபோது, வீட்டிலிருந்த குழந்தையைக் கடத்திச் சென்றதாக பொத்துவில் பொலிஸ் நிலையத்தில் குழந்தையின் தாய் முறைப்பாடு செய்தார்.

இது தொடர்பில் விசாரணை செய்த பொலிஸார், குறித்த தம்பதியை  நேற்றுமுன்தினம் புதன்கிழமை (02) மாலை கைதுசெய்த அதேவேளை, குழந்தைiயும் மீட்டனர்.

குறித்த குழந்தையை மருத்துவப் பரிசோதனையின் பின்னர் பெற்றோரிடம் பொலிஸார் ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .