2021 ஏப்ரல் 15, வியாழக்கிழமை

சம்மாந்துறையில் தேசிய வர்த்தகக் கண்காட்சி

Niroshini   / 2016 மார்ச் 22 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சி. அன்சார்

கைத்தொழில் மற்றும் வணிகம் பற்றிய அமைச்சின் ஏற்பாட்டில், தேசிய வர்த்தகக் கண்காட்சி எதிர்வரும் மே மாதம் 5ஆம்,6ஆம், 7ஆம் திகதிகளில் சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரி, தொழிற் பயிற்சி நிலையம் மற்றும் ஜனாதிபதி விளையாட்டு மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளது.

இதன்போது, வணிகத் திணைக்களம், இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி அதிகார சபை, நிறுவன பதிவாளர் திணைக்களம், தேசிய அறிவுசார் சொத்துக்கள் அதிகார சபை, ஆடைகள் தொழில் பயிற்சி நிறுவனம், லங்கா அஷோக்லேலன்ட் லிமிட்டட் உள்ளிட்ட 36 நிறுவனங்களின் 15ற்கும் மேற்பட்ட கண்காட்சிக் கூடங்கள், சுமார் 75 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X