2021 ஜனவரி 23, சனிக்கிழமை

சூட்டுக்காயங்களுடன் யானையின் சடலம் மீட்பு

Princiya Dixci   / 2016 ஜூலை 12 , மு.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி. சுகிர்தகுமார், எஸ். கார்த்திகேசு

அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காஞ்சிரங்குடாவிலிருந்து சாகாமத்துக்குச் செல்லும் வீதியின் மயானத்தை அண்மித்த பகுதியில் சூட்டுக்காயங்களுடன் யானையொன்றின சடலம்,  இன்று செவ்வாய்க்கிழமை (12) காலை மீட்கப்பட்டுள்ளது.

சுமார் 20 வயது மதிக்கத்தக்க யானையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பிரதேச வன இலாக பொறுப்பதிகாரி ரி. ஜெகதீஸ் தெரிவித்தார்.

யானையின் உடலில் தொடைப்பகுதியல் இரண்டு சூட்டுக்காயங்கள் காணப்படுகின்ற போதிலும் வைத்திய பரிசோதனை அறிக்கையின் பின்னரே உயிரிழந்தமைக்கான காரணத்தைத் தெரிவிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

யானை இறந்து கிடப்பதாக நேற்று (11) மாலை திருக்கோவில் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அவ்விடத்துக்குச் சென்ற அவர்கள், வனபரிபாலன திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு தகவல் வழங்கினர்.

இதனடிப்படையிலேயே அவ்விடத்துக்கு இன்று (12) காலை சென்ற வனபரிபாலன உத்தியோகத்தர்கள், சடலத்தை மீட்டு மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .