2026 பெப்ரவரி 19, வியாழக்கிழமை

மாமனார் தாக்கியதில் மருமகன் உயிரிழப்பு

Janu   / 2026 பெப்ரவரி 19 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொஸ்கம, அஸ்வத்த தெற்கு, கொஸ்கஹயடகடை பகுதியில் மாமனாருக்கும் மருமகனுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், மாமனார் தனது மருமகனை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த மருமகன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக கொஸ்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புவக்பிட்டிய, அஸ்வத்த வடக்கு பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய துஷான் ரங்கன மாயாதுன்ன என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன் சம்பவத்தின் போது அவர் மது போதையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

குடும்பத் தகராறு காரணமாக ஏற்பட்ட தர்க்கத்தைத் தொடர்ந்து நடத்தப்பட்ட  தாக்குதலில் படுகாயமடைந்த, குறித்த நபர் அவிசாவளை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து  வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரான மாமனார், கொஸ்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .