2021 மே 12, புதன்கிழமை

டெங்கொழிப்பு கைவினைப் போட்டி

Kanagaraj   / 2015 செப்டெம்பர் 26 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

தேசிய டெங்கொழிப்பு வேலைத்திட்டத்துக்கு அமைய அட்டாளைச்சேனை பிரதேச பாடசாலை மாணவர்களிடையே டெங்கொழிப்பு கைவினைப் போட்டி நடாத்தப்படவுள்ளதாக அட்டாளைச்சேனை பிரதேச பதில் சுகாதார வைத்தியதிகாரி ஏ.எம்.எம். முனவ்வர், வெள்ளிக்கிழமை (25) தெரிவித்தார்.

நாடுதழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள இவ் வேலைத் திட்டத்திற்கு அமைய அட்டாளைச்சேனை கல்விக் கோட்டத்துக்கு உட்பட்ட பாடசாலை மாணவர்களிடேயே டெங்கு நுளம்பைப் பிடித்தல், டெங்கு பரவக் கூடிய இடங்கள், டெங்கு நுளம்பை அழித்தல், டெங்கினால் ஏற்படக் கூடிய பாதிப்பு போன்ற தொனிப் பொருளில் கைவினை போட்டி நடைபெறவுள்ளது.

பிரதேச, மாகாண மற்றும் அகில இலங்கை ரீதியில் போட்டிகள் நடைபெறவுள்ளதாகவும், இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதலாம் பரிசு 05 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசு 03 ஆயிரம் ரூபாயும், முன்றாம் பரிசு 02 ஆயிரம் ரூபாயும் மற்றும் 05 ஆறுதல் பரிசுகள் ஆயிரம் ரூபாய் வீதமும் மற்றும் சான்றிதல்களும் வழங்கப்படுமெனவும் அவர் கூறினார்.

கடந்த 2014ஆம் வருடம் நடைபெற்ற கைவினைப் போட்டியில் பிரதேச மற்றும் மாகாண ரீதியில் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் ஒலுவில் அல்- ஹம்றா மகா வித்தியாலயம் முதலாம் இடத்தினைப் பெற்றித்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான போட்டியின் மூலம் பாடசாலை மாணவர்கள் டெங்கு நோய், அதன் தாக்கம், அதனால் சமூகத்துக்கு ஏற்படக் கூடிய பாதிப்பு என்பவற்றை அறிந்து கொள்ளக் கூடிய நிலை ஏற்படுவதோடு மாணவர்களை டெங்கொழிப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்துவதற்கான விழிப்புணர்வாக இவை அமையும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .