2021 மே 16, ஞாயிற்றுக்கிழமை

'துஷ்பிரயோகங்கள் தொடர்பில் அவதானத்தோடு செயற்பட வேண்டும்'

Niroshini   / 2015 ஒக்டோபர் 01 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்  

பெண் பிள்ளைகளின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் மிகுந்த அவதானத்தோடு செயற்படவேண்டும் என ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தெரிவித்தார்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையும் இணைந்து ஆலையடிவேம்பு பிரதேச செயலக முன்றலில் நேற்று புதன்கிழமை ஏற்பாடு செய்த 'பிள்ளைகளை உயிர்போல் காப்போம்' என்ற தொனிப்பொருளிலான சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கெதிரான விழிப்புணர்வு செற்பாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

இந்நிகழ்வில் வழங்கப்படும் துண்டுப்பிரசுரங்களை மாணவர்கள் வீட்டிலுள்ள தமது பெற்றோருக்கும் அயலவர்களுக்கும் கொடுத்து அவர்களையும் வழிப்பூட்டுவதுடன் பெண்பிள்ளைகள் தொடர்பில் விசேட கவனமெடுத்துச் செயற்படவேண்டும் எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து குறித்த விழிப்புணர்வு வேலைத்திட்டம் தொடர்பாக அச்சிடப்பட்ட விசேட துண்டுப்பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகிக்கும் வேலைத்திட்டம் இடம்பெற்றதுடன், ஸ்டிக்கர்களை வாகனங்களில் ஒட்டும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .