2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

நியமனத்தை மீள வழங்குமாறு கோரிக்கை

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2019 நவம்பர் 22 , பி.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேர்தல் ஆணைக்குழுவால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த பயிலுனர் செயற்றிட்ட உதவியாளர்களுக்கான நியமனத்தை மீள வழங்குமாறு, பயிலுனர் செயற்றிட்ட உதவியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த செப்டெம்பர் மாதம் 16ஆம் திகதி, பயிலுனர் செயற்றிட்ட உதவியாளர் நியமனம் வழங்கப்பட்டிருந்த வேளையில் செப்டெம்பர் மாதம் 18ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் தமது நியமனங்கள் தேர்தல் ஆணையாளரினால் தேர்தலை காரணம் காட்டி செப்டம்பர் மாதம் 23ஆம் திகதி இடைநிறுத்தப்பட்டிருந்தது.

தேர்தல் நிறைவு பெற்ற பின்னர் தமக்கான இடங்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையென பாதிக்கப்பட்டுள்ளோர் தெரிவிக்கின்றனர்.

தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள், மீள்குடியேற்றம் மற்றும் பொருளாதாரம், வடமாகாண அபிவிருத்தி, இளைஞர் விவகார அமைச்சின் ஊடாக அதன் செயலாளரினால் கையொப்பம் இடப்பட்டு இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது.

அந்தந்த மாவட்ட செயலகத்துக்குச் சென்று எங்களுக்கான வேலைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு பிரதேச செயலகங்களுக்கு சென்று கடமையினை பொறுப்பேற்குமாறு அரசாங்க அதிபரால் அறிவிக்கப்பட்டிருந்த வேளையில் எங்களது நியமனங்கள் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரினால் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, அறிவிக்கப்பட்டிருந்தன.

 ஜனாதிபதித் தேர்தல் முடிந்ததன் பின்னர் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரின் அறிவுறுத்தலைப் பெற்று மீண்டும் இணைத்துக்கொள்வோம் என மாவட்ட செயலகத்தில் தெரிவிக்கப்பட்ட நிலையிலும், இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .