Freelancer / 2025 நவம்பர் 15 , மு.ப. 11:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
அங்குனுகொலபெலெஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து தடுத்து வைக்கப்பட்டுள்ள தெவுந்தர விஷ்னு தேவாலயத்துக்கு அருகில் இளைஞர்கள் இருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரின் சகோதரன் மீது கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த கொலை முயற்சியில் ஒரு கைதி கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு காயமடைந்தவர் தெவுந்தர விஷ்னு தேவாலயத்துக்கு அருகில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட இளைஞர்கள் இருவரில் ஒருவரது சகோதரன் ஆவார்.
சிறைச்சாலையில் உள்ள உணவு தட்டில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கூரிய ஆயுதத்தை பயன்படுத்தி இந்த கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். R
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago