2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

நல்லிணக்கக் குழுவின் அனுபவப் பகிர்வு

வி.சுகிர்தகுமார்   / 2020 மார்ச் 08 , பி.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நாட்டில் நிலவிவரும் வதந்திகள், வெறுப்புப்பேச்சுகள், இனங்களைப் பிளவுபடுத்தும் நடவடிக்கைகளை இல்லாதொழித்தல், நாடுகளிடையே நிலவும் பல்வகைப் போட்டிகள் சம்மந்தமாகத் தெளிவுபடுத்தும் பத்திரிகையாளர் சந்திப்பும் சமய நல்லிணக்கக் குழுவின் கலந்துரையாடல், அனுபவப் பகிர்வும், அக்கரைப்பற்றில் நேற்று (07) நடைபெற்றது.

இந்நிகழ்வு, அம்பாறை மாவட்ட சமய நல்லிணக்கக் குழுவின் ஏற்பாட்டில், சொன்ட் அமைப்பின் ஸ்தாபகரும் சமய நல்லிணக்கப் பேரவையை முன்கொண்டு செல்பவருமான எஸ்.செந்தூர்ராஜா தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் வணக்கத்துக்குரிய ரன்முத்துகல சங்ககரரெத்தின தேரர், அருட்தந்தை நாலக பொன்சேகா, மௌவி ஏ.ஏ.அஸ்வர் உள்ளிட்ட சமய பெரியார்களும் பல் சமூகப் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .