2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

பகிடி வதை; தென்கிழக்கு பல்கலை மாணவர்கள் ஐவர் காயம்

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 28 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தினுடைய விஞ்ஞானபீடத்தின் முதலாம் வருட மாணவர்கள் ஐந்து பேர் புதன்கிழமை (26)  இரவு  பகிடி வதைக்குள்ளாகி காயமடைந்த நிலையில் சம்மாந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சம்மாந்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகம் ஒலுவில் பிரதேசத்தில் அமைந்துள்ளபோதிலும்,  இதனுடைய  தென்கிழக்குப் பல்கலைக்கழக சம்மாந்துறை விஞ்ஞானபீடத்துக்கு வருகைதந்த முதலாம் வருட மாணவர்களே பகிடி வதைக்குள்ளாகியுள்ளனர்.

இந்த மாணவர்கள் பகிடி வதைக்குள்ளாகி சம்மாந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, அவ்வைத்தியசாலைக்கு பொலிஸாருடன் சென்ற பல்கலைக்கழக பதிவாளர் உள்ளிட்ட அதிகாரிகள்; தகவல்களை பெற்றுக்கொண்டதுடன் விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பல்வேறுபட்ட தகவல்கள் தெரிவிக்கப்படுவதினால்;, சட்ட வைத்திய அதிகாரியின் மருத்துவ அறிக்கை கிடைத்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .