Editorial / 2025 டிசெம்பர் 28 , பி.ப. 04:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு ஜனவரி 9 ஆம் திகதி வரையில் விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளார்.
கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை (28) அன்று ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முந்தைய செய்திகள்..
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு வழங்கப்பட்ட 20 துப்பாக்கிகள் குறித்து விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரித்துள்ளனர்.
அவற்றில்13 T56 துப்பாக்கிகள் 59 mm துப்பாக்கிகளும் உள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
முன்னாள் அமைச்சருக்கு வழங்கப்பட்ட 1500 க்கும் மேற்பட்ட T56 தோட்டாக்கள் மற்றும் 100 க்கும் மேற்பட்ட 9 mm தோட்டாக்கள் குறித்து தற்போது விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
குற்றப் புலனாய்வுத் துறையின் வழிகாட்டுதலின் கீழ் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
இந்த துப்பாக்கிகள் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு 2001 ஆம் ஆண்டு வழங்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரித்துள்ளனர்.
குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் 72 மணிநேர தடுப்பு உத்தரவு பெறப்பட்டுள்ளது.
அவரது தனிப்பட்ட பாதுகாப்புக்காக இலங்கை இராணுவத்தால் வழங்கப்பட்ட துப்பாக்கி காணாமல் போனது தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பின்னர் வெள்ளிக்கிழமை (26) அன்று அவர் கைது செய்யப்பட்டார்.
இராணுவத்தினரால் 2001ஆம் ஆண்டு டக்ளஸ் தேவானந்தாவுக்கு வழங்கப்பட்ட துப்பாக்கிகளில் கைத்துப்பாக்கியொன்று வெலிவேரியவில் கால்வாய் ஒன்றுக்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 2019ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்ட துப்பாக்கி தொடர்பாக மறைந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ‘மாகந்துரே மதுஷ்’ என்பவரின் கூட்டாளி ஒருவர் அளித்த தகவலைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்கைது செய்யப்பட்டார். அந்த துப்பாக்கி தேவானந்தாவால் தனக்கு வழங்கப்பட்டதாக, சந்தேக நபர் வாக்குமூலம் அளித்திருந்தார்.
இந்த துப்பாக்கி, பல கொலைகளுக்கு பயன்படுத்தப்பட்டதாக அடையாளம் காணப்பட்டது, மேலும் விசாரணைகளில் அது இராணுவத்தால் வழங்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
தேவானந்தாவுக்கு 2001ஆம் ஆண்டு இராணுவத்தால் 13 T56 தாக்குதல் துப்பாக்கிகள் மற்றும் ஆறு ரிவால்வர்கள் வழங்கப்பட்டன.
மேலும், சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு எந்த துப்பாக்கியும் பயன்படுத்தப்படாது என்பதை உறுதி செய்வதாக முன்னாள் அமைச்சர் எழுத்துப்பூர்வ உறுதிமொழி அளித்திருந்தார்.
துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்ட நேரத்தில், மாகந்துரே மதுஷ் ஒரு நீதிபதி முன்னிலையில் வாக்குமூலம் அளித்து, தேவானந்தாவிடமிருந்து ஒரு ஆயுதத்தைப் பெற்றதாகக் கூறியுள்ளார். மதுஷுக்கு ஆயுதத்தை வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை எந்த அடிப்படையில் கண்டறிவது என்பது குறித்து விசாரணைகள் நடந்து வருகின்றன.
குற்றப் புலனாய்வுத் துறை (CID) ஆரம்பத்தில் தேவானந்தாவுக்கு எதிராக 90 நாள் தடுப்பு உத்தரவு பிறப்பிக்கக் கோரியதாகவும், ஆனால் அந்த கோரிக்கையை பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நிராகரித்ததாகவும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட 72 மணி நேரத் தடுப்பு உத்தரவின் கீழ் தேவானந்தா தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு சனிக்கிழமை (27) அன்று தெரிவித்தது.
வாக்குமூலம் பதிவு செய்வதற்காக முன்னாள் அமைச்சர் வெள்ளிக்கிழமை CIDக்கு அழைக்கப்பட்டார், அதன் பிறகு அவர் கைது செய்யப்பட்டார்.
72 மணி நேரத் தடுப்பு உத்தரவு காலாவதியான நிலையில், கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் அவர், ஞாயிற்றுக்கிழமை (28) அன்று ஆஜர்படுத்தப்பட்டார்.
26 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
3 hours ago
4 hours ago