Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 டிசெம்பர் 16 , மு.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கனகராசா சரவணன்
அம்பாறை, சாகாமம் குளப்பகுதியில் நேற்றிரவு பசு மாடொன்று துப்பாக்கியல் சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தெரிவித்த பொலிஸார், அப்பகுதியில் மறைத்துவைக்கப்பட்டிருந்த உள்ளூர் தயாரிப்புத் துப்பாக்கியொன்றையும் மீட்டுள்ளனர்.
வழமை போன்று மாட்டுப்பட்டியில் மாடுகளை அடைத்துவிட்டு வீட்டுக்குச்; சென்ற உரிமையாளர், இன்று பட்டிக்குச் சென்றபோது குறித்த பசு மாடு துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் இறந்து காணப்பட்டதை அவதானித்துள்ளார்.
இது தொடர்பில் தமக்கு உரிமையாளர் வழங்கிய தகவலை அடுத்து, குறித்த இடத்துக்குச் சென்று தேடுதல் நடத்தியபோது, மரமொன்றில்; மறைத்து வைக்கப்பட்ட துப்பாக்கியையும் ரவையையும் மீட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago