Freelancer / 2026 மே 02 , மு.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு நடைபெற்ற இரண்டாம் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற்ற 15 வாக்குச்சாவடிகளில் இன்று சனிக்கிழமை மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேற்கு வங்க சட்டப்பேரவையின் முதல் கட்டத் தேர்தல் ஏப்ரல் 23 ஆம் திகதி நடைபெற்ற நிலையில், இரண்டாம் கட்டத் தேர்தல் ஏப்ரல் 29 ஆம் திகதி நடைபெற்றது.
இந்நிலையில், இரண்டாம் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற்ற 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் நேற்று உத்தரவிட்டது.
இது தொடர்பாக மேற்கு வங்க தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தில், மாநில தேர்தல் நிர்வாக அமைப்பிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 15 வாக்குச்சாவடிகளில் 11 வாக்குச்சாவடிகள் மகர்ஹத் பச்சிம் சட்டமன்றத் தொகுதியிலும், நான்கு வாக்குச்சாவடிகள் டைமண்ட் ஹார்பர் தொகுதியிலும் அமைந்துள்ளன.
ஃபால்டா சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற வாக்குப்பதிவு தொடர்பாக பல்வேறு புகார்கள் பெறப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பான முடிவு எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கு வங்கம், அசாம், தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் தற்போது நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில், மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவிடப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. (a)

34 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago