ரீ.கே.றஹ்மத்துல்லா / 2020 மார்ச் 04 , பி.ப. 05:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட மூன்று பாடசாலைகளில் சுனாமி அனர்த்த வெளியேற்ற ஒத்திகை நடத்தப்படவுள்ளது.
சுனாமி அனர்த்தத்தின் போது, பாதுகாப்பான முறையில் வேளியேற்ற நடவடிக்கையை எவ்வாறு முன்னெடுப்பது தொடர்பாக மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களை விழிப்புணர்வு ஊட்டும் வேலைத்திட்டம் தொடர்பிலான கலந்துரையாடல், அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் அண்மையில் நடைபெற்றது.
அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம்.றியாஸ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எம்.இஸ்மாயில், அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி எஸ்.எம்.முனாசுதீன், 241ஆவது இராணுவப் படைப்பிரிவின் கெப்டன் எச்.எம்.சந்தனசேன உள்ளிட்ட இராணுவ, பொலிஸ் அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், கிராம உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது, அம்பாறை மாவட்டத்தில் கோமாரி, திருக்கோவில், அட்டாளைச்சேனை ஆகிய பிரதேசங்களின் கடற்கரை பிரதேசத்தை அண்டிய மூன்று பாடசாலைகள் சுனாமி அனர்த்த ஒத்திகைக்காகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளன.
இதற்கமைய, அட்டாளைச்சேனை அல்-அர்ஹம் வித்தியாலத்தில் முதலாவது பாதுகாப்பான அனர்த்த வெளியேற்றுகை ஒத்திகை, முப்படையினர், பிரதேச சபை, சுகாதாரத் துறையினரின் கூட்டிணைந்த செயற்பாட்டின் மூலம் நாளை (05) காலை முன்னெடுக்கப்படவுள்ளது.
சுனாமி அனர்த்தத்தின் போது வழங்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை, பாதுகாப்பான வேளியேற்றுகை, அனர்த்தத்தின் போது ஏற்படும் பாதிப்புகளுக்கான முதலுதவி, பாதுகாப்பு, வெளியேற்றுகைக்குப் பாதுகாப்பான பாதை ஒழுங்கு முறைகள் தொடர்பில் முக்கிய ஒத்திகைப் பயிற்சிகள் இதில் வழங்கப்படவுள்ளன.
55 minute ago
55 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
55 minute ago
1 hours ago
1 hours ago