2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

‘பெரும்பான்மையின வாக்குகளே தமிழ் மக்களை பாதுகாத்தது’

Editorial   / 2020 ஜனவரி 05 , பி.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கார்த்திகேசு, வி.சுகிர்தகுமார்      

“ஜனாதிபதித் தேர்தலில், பெரும்பான்மை மக்களின் வாக்குளால் தமிழ் மக்கள் பாதுகாக்கப்பட்டுளார்கள். சஜித் வெற்றிபெற்றிருந்தால், இன்று தமிழ் மக்களின் இருப்புக் கேள்விக்குறியாயிருக்கும்” என, தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்தார்.

முன்னாள் போராளிகளின் அழைப்பின் பேரில், திருக்கோவில் கலாசார மத்திய நிலையத்தில் நேற்று (04) மாலை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, மேற்படி தெரிவித்தார்.

இவர் இங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், “ஜனாதிபதித் தேர்தலில், சஜித்தின் பக்கம் நின்றவர்கள் அனைவரும் இனவாதம் பேசுகின்ற தலைவர்கள். ஆனால், அவ்வாறு இருந்தும் சம்பந்தர் ஐயாவின் கதையைக் கேட்டு, தமிழ் மக்கள் அன்னத்துக்கே வாக்களித்தர்.

“தமிழ்த் தேசியம் பேசிக் கொண்டு இருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தமிழர்களுக்கு வழங்க கூடாது எனத் தடுப்போருடன், தேர்தல் மேடையில் ஒன்றாக நின்றனர்.

“இப்படி இருந்து கொண்டு எப்படி கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தித் தரும்படி கேட்பது. இப்போது அவர் போராட்டம் நடத்தப் போவதாக கூறி வருகின்றார். இது எல்லாம் போலி வேலைகள். இவ்வாறு தான் தொடர்ந்தும் கூட்டமைப்பு, தமிழ் மக்களை ஏமாற்றி வருகின்றது.

“எனவே, தமிழ் மக்களுக்கு ஒரு மாற்றம் தேவை. இதனை நிறைவேற்றுவதே எமது இலக்கு” என்றா​ர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .