2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

பெண்ணுக்கு அவதூறு விளைவித்தவருக்கு விளக்கமறியல் நீடிப்பு

Gavitha   / 2016 மார்ச் 17 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை பொத்துவில் பிரதேசத்திலுள்ள பெண் ஒருவருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில், அவரை விமர்சித்து முகநூலில் பதிவேற்றம் செய்தார் என்ற குற்றஞ்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நபர் சார்பில் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட பிணை மனுவை, பொத்துவில் நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வஹாப்தீன் நிராகரித்துள்ளார்.

இதேவேளை, சந்தேக நபரை எதிர்வரும் 29ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் மேலும் உத்தரவிட்டார்.

குறித்த பெண் குறித்தான சில செய்திகளை கடந்த மாதம் 28ஆம் திகதி, முகநூலில் பதிவேற்றம் செய்த இளைஞருக்கான பிணை மனுவையே நீதவான் நிராகரித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்ணால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டையடுத்து, சந்தேக நபரை கைது செய்த பொலிஸார் அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .