Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 05 , மு.ப. 10:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா
மக்களின் பிரச்சினைகளை தீர்க்காமல் இந்த நல்லாட்சியிலும் இழுத்தடிப்புச் செய்யப்படுமாயின், மாவட்ட மீனவர் பேரவையானது தேசிய மீனவர் பேரவைக்கு கொண்டுசென்று நாடு தழுவிய ரீதியில் போராட்டங்களை முன்னெடுக்குமென மாவட் மீனவர்; பேரவையின் தலைவர் கே.இஸ்ஸதீன் தெரிவித்தார்.
மக்கள் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல், மாவட்ட மீனவர் பேரவையின் ஏற்பாட்டில்; அக்கரைப்பற்று வை.எம்.சி.ஏ. கூட்ட மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது. இதன்போதே அவர் இதனைக் கூறினார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், 'மக்களின் வாக்குகளைப் பெற்றுச்செல்லும் மக்கள் பிரதிநிதிகளும் மக்களின் வரிப்பணத்தின் மூலம் சம்பளம் பெறும் அரசாங்க அதிகாரிகளும் மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து தீர்வு வழங்குவதற்கு தயக்கம் காட்டுகின்றமை கவலைக்குரிய விடயம்' என்றார்.
'யுத்தம் முடிந்து சில வருடங்கள் கழிந்தும், இன்னும் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இழுத்தடிப்புச் செய்யப்படுகின்றன' எனவும் அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ரி.கலையரசன், தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் வட, கிழக்கு இணைப்பாளர் அண்டனி ஜேசுதாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
9 minute ago
23 minute ago
39 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
23 minute ago
39 minute ago
50 minute ago