2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

'மாகாண சபைகளின் அதிகாரங்கள் பறிக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஆதரவில்லை'

Gavitha   / 2016 டிசெம்பர் 24 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

பைஷல் இஸ்மாயில்

மாகாண சபைகளின் அதிகாரங்களை பறித்தெடுக்கும் எந்தவொரு  நடவடிக்கைக்கும் தாம்  ஆதரவளிக்கப் போவதில்லை என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நேற்று இடம்பெற்ற முதலமைச்சர்களுடனான சந்திப்பின் போது இவ்வாறு கூறியதாக, அவர் தெரிவித்தார்;.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

'மாகாண சபைகள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும். அவற்றுக்கு அரசியல் யாப்பு ரீதியாக வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்' என்றும் அவர் கூறியதாக  தெரிவித்தார்.

இதன்போது,  தற்போது  வெளியிடப்பட்டுள்ள அபிவிருத்தி (விசேட ஏற்பாடுள்) சட்டமூலம் தொடர்பிலும் பிரதமர் விளக்கமளித்தாகவும் குறித்த சட்டமூலம் அபிவிருத்திகளை துரிதப்படுத்தவே கொணடுவரப்பட்டுள்ளதுடன், அது அதிகாரங்களை  ஒருவருக்கு வழங்கும் திவிநெகும போன்ற சட்டமூலங்கள் போல் அமையாது என்றும்  பிரதமர் தெரிவித்ததாக கிழக்கு முதலமைச்சர் குறிப்பிட்டார்.

எவ்வாறயினும் அரசாங்கம், மாகாண சபைகளை செயற்றிறன் மிக்கதாய் மாற்றும் சட்ட மூலங்களை கொண்டுவர வேண்டும் என்றும் மாகாணங்களில் மத்திய அரசினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் மாகாண சபைகளின் பங்களிப்புடன் நடைபெற வேண்டும் என்றும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், அதில் மாகாண சபைகள் தொடர்பான விடயங்களுக்கு, மாகாணங்களின் ஆலோசனைகளைப் பெற்று, அவற்றை நடைமுறைப்படுத்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதன்போது இணக்கம் தெரிவித்ததாக, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார்,

அத்துடன் மாகாண சபைகளுக்கு காணி மற்றும் நிதி உள்ளிட்ட அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் எனவும் அதிகாரப் பகிர்வை துரிதப்படுததுவதன் ஊடாகவே, இவை சாத்தியப்படும் எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை கிழக்கு மாகாண சபைக்கான நிதியொதுக்கீட்டில் இம்முறை பாரியளவு நிதி  குறைக்கப்பட்டுள்ளது என்பதுடன், அவற்றை அதிகரித்து தரவேண்டும் எனவும் 2016ஆம் ஆண்டுக்கான நிதியொதுக்கீட்டில் மேலும் கிடைக்கப்பெற வேண்டிய நிதியை விரைவில் பெற்றுத் தர ஆவண செய்ய வேண்டும் என்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்

அத்துடன், மாகாணசபை உறுப்பினர்களுக்கான நிதியொதுக்கீடுகள் தொடர்பிலும் மாகாண சபை உறுப்பினர்களுக்கான நிதியொதுக்கீடுகளை அதிகரித்து வழங்குவதன் ஊடாக  செயற்றிறன் மிக்கதாய் அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் எனவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் பிரதமரிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .