S.Renuka / 2026 ஜனவரி 14 , பி.ப. 12:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகின் மிக மோசமான மனிதர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் என ஹொலிவூட் நடிகர் மார்க் ருப்பலோ விமர்சித்துள்ளார்.
அமெரிக்காவில் கடந்த 11ஆம் திகதி கோல்டன் குளோப் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஹொலிவூட் நடிகர் மார்க் ருப்பலோ பங்கேற்றார்.
மினியாபோலிஸ் நகரில் ரெனி நிக்கோல் குட் என்ற பெண் அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அவரும் மற்ற நடிகர்களும் 'பீ குட்' என்ற வாசகம் அடங்கிய பேட்ச் அணிந்து வந்திருந்தனர்.
வெனிசுலா மீது அமெரிக்கா எடுத்து வரும் போர் நடவடிக்கை மற்றும் குடியேற்றக் கொள்கைகளுக்கு எதிராக 'நோ கிங்ஸ்' என்ற இயக்கத்தின் மூலம் ருப்பலோ தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கோல்டன் குளோப் விருது வழங்கும் விழாவில் பேசிய மார்க் ருப்பலோ, டொனால்ட் ட்ரம்ப் உலகின் மிக மோசமான மனிதர் ஆவார். உலகின் மிக சக்திவாய்ந்த நாட்டின் அதிகாரத்தை இவரைப் போன்ற ஒருவரிடம் ஒப்படைத்திருப்பது ஆபத்தானது. இவர் பாலியல் பலாத்கார குற்றவாளி மற்றும் தண்டனை பெற்ற நபர் ஆவார். வெனிசுலா மீதான போர் சட்டவிரோதமானது என கடுமையாக விமர்சித்துள்ளார்.
36 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
2 hours ago
3 hours ago