Niroshini / 2015 ஒக்டோபர் 04 , மு.ப. 05:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா
அம்பாறை-அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட மாடு அறுக்கும் இடத்தை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அட்டாளைச்சேனை பிரதேச சபை செயலாளர் எஸ்.எம்.கலீலுல் றகுமான் இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
அட்டாளைச்சேனை 16ஆம் பிரிவில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் பராமரிப்பிலுள்ள மாடு அறுக்கம் இடத்துக்கு அருகாமையில் மாட்டின் கழிவுகள் சீரான முறையில் அகற்றப்படாமையினால் துர்நாற்றம் வீசுவதோடு நாய்த்தொல்லையும் அதிகரித்துக் காணப்படுகின்றது.மேலும்,அருகில் உள்ள ஆறும் மாசடைகின்றது.
இதனால் பல்வேறு அசைளகரியங்களுக்குள்ளாகுவதாக இப்பகுதி மக்கள் எமக்கு முறைப்பாடு செய்துள்ளனர்.
இதையடுத்து,மாடு அறுக்கும் இடத்தினை வேறொரு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த இடம் கிடைத்ததும் மாடு அறுக்கம் இடம் விரைவாக மாற்றப்படும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .