2026 ஜனவரி 28, புதன்கிழமை

யாழ். பண்டத்தரிப்பில் இருந்த இராணுவ முகாம் அகற்றப்பட்டது

Editorial   / 2026 ஜனவரி 28 , பி.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

பு.கஜிந்தன்

பண்டத்தரிப்பு கிராம அலுவலர் பிரிவிலுள்ள பிரதேச சபையின் கொல்களம் அமைந்துள்ள காணியானது  2012 ஆம் ஆண்டு முதல் இராணுவத்தினரின் பயன்பாட்டில் இருந்து வரும் நிலையில் தற்போது அந்த காணியை விட்டு இராணுவத்தினர் வெளியேறியுள்ளனர்.

அங்கிருந்து வெளியேற்றப்பட்ட இராணுவத்தினர் அராலி இராணுவ முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

குறித்த காடாப்புலம் காணியானது  பிரதேச சண்டிலிப்பாய் செயலாளரிடம் புதன்கிழமை (28) அன்று உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சுழிபுரம் பகுதியில் இருந்த இராணுவ முகாமும் அகற்றப்பட்டு அங்கிருந்த இராணுவத்தினர் சங்கானையில் உள்ள இராணுவ முகாமுக்கு மாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X