2020 நவம்பர் 25, புதன்கிழமை

மையவாடி வேலைத்திட்டத்துக்காக நிதி ஒதுக்கீடு

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 22 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் எஸ்.மௌலானா

சாய்ந்தமருதுக் கடற்கரைப் பகுதியில் புதிதாக உருவாக்கப்படவுள்ள மையவாடியின் வேலைத்திட்டத்துக்காக 56 இலட்சம் ரூபாய் நிதியை அடுத்த வருட முற்பகுதியில் ஒதுக்கீடு செய்து தருவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் மரைக்காயர் சபைப் பிரதிநிதிகள் புதன்கிழமை (21) மாலை முதலமைச்சரை அவரது அலுவலகத்தில் சந்தித்து, சாய்ந்மருதுப் பிரதேசத்துக்கான தேவைகள் தொடர்பில் கலந்துரையாடினர். இதன்போதே, மேற்படி மையவாடி வேலைத்திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்வதாகவும் அவர் கூறினார்.  

அத்துடன், சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலில் அமைந்துள்ள நூலகத்தை விஸ்தரித்து தளபாடங்கள் மற்றும் நூல்களைக் கொள்வனவு செய்து தருவதற்கும் முதலமைச்சர் இணக்கம் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--