2026 ஜனவரி 28, புதன்கிழமை

ரணிலுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை

Editorial   / 2026 ஜனவரி 28 , பி.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான வழக்கின் விசாரணைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து மார்ச் மாதம் மேல் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று சட்டமா அதிபர் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.

சட்டமா அதிபர் சார்பாக ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், முதல் சந்தேக நபரான ரணில் விக்கிரமசிங்க தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும், இரண்டாவது சந்தேக நபரான சமன் ஏகநாயக்க என்றும் அழைக்கப்படும் சோமிசார பண்டார ஏகநாயக்க மீதான விசாரணைகள் ஒரு மாதத்திற்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.

மீதமுள்ள விசாரணைகள் முடிவடைந்ததும், திட்டமிட்டபடி மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X