2021 மே 16, ஞாயிற்றுக்கிழமை

மாளிகைக்காட்டில் வரவேற்பு நிகழ்வு

Niroshini   / 2015 நவம்பர் 16 , மு.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் மௌலானா

திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டதையிட்டு சாய்ந்தமருது, மாளிகைக்காடு ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்தினர் ஒழுங்கு செய்திருந்த வரவேற்பு நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு மாளிகைக்காடு பிஸ்மில்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.
 
பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் அல்-ஹாஜ் வை.எம்.ஹனீபா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை மாநகர பிரதி முதல்வர் ஏ.எல்.ஏ.மஜீத், மாநகர சபை உறுப்பினர் ஏ.ஏ.பஷீர், பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் பிரதித் தலைவர் யூ.எல்.எம்.காசீம் மௌலவி, செயலாளர் ஏ.மஜீத் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது, சாய்ந்தமருதில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தித் திட்டங்கள் அடங்கிய மகஜர் ஒன்றினை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரஸிடம் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் வை.எம்.ஹனீபா கையளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .