2021 ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை

ராஜன் மீது தாக்குதல் முயற்சி

Editorial   / 2019 நவம்பர் 20 , பி.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 சகா

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரன் ராஜன் மீது தாக்குதல் முயற்சியொன்று கடந்த திங்கள்கிழமை (18) இடம்பெற்றுள்ளது.

 இந்தச் சம்பவம் பற்றி கருத்து  தெரிவித்த மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரன் ராஜன்:-

 "தனது தொழில் கடமைகளை முடித்துவிட்டு வீடு திரும்பி னேன். நான் வீடு திரும்பியதும் எனது மனைவி வீட்டு கதவை  பூட்டியுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் எனது வீட்டுக்கு முன் வாகனமொன்றிலும்  டிப்பர் ஒன்றிலும்  சுமார் 20 மோட்டார் சைக்கிள்களிலும் வந்த கும்பல், " டேய் ராஜன்" "வீட்டுக்கு வெளியே வாடா" என்று கத்தி சத்தமிட்டனர். நான் வீட்டைத் திறக்காமல் அருகிலுள்ள எனது சகோதரியின் வீட்டுக்கு, பின்பக்கத்தால் சென்று அங்கிருந்து வந்தவர்கள் யார் என்பதை அவதானித்தேன்.

அதில் இருவர் எனக்குத் தெரிந்தவர்கள். நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனின் விசுவாசிகள்.அவர்கள் கையில் ஆயுதங்களை வைத்திருந்தார்கள்.  நாங்கள்  கதவைத் திறக்காததால்  என்னைத் தாக்க வந்தவர்கள்,  ஆத்திரமடைந்து  கோடரியால் கதவைக் கொத்திவிட்டு  

  வீட்டு வாசலில் நின்று "சஜித்திடம் காசு வாங்கிவிட்டா  வேலை செய்தாய் ".  "இனி நாங்கள் வந்துவிட்டோம். உன்னை கவனிப்போம்"என்று கூச்சலிட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பில் அவர் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .