2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

வெட்டுக்காயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு

Editorial   / 2019 நவம்பர் 29 , பி.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.சுகிர்தகுமார்     

 

அக்கரைப்ற்று,  கண்ணகிகிராமம் கற்குவாரி ஒன்றின் குடிசையிலிருந்து,  வெட்டுக்காயங்களுடன் இளம் குடும்பஸ்தரின் சடலத்தை,  அக்கரைப்பற்று பொலிஸார், இன்று (29) காலை மீட்டுள்ளனர். 

சின்னப்பனங்காடு புளியம்பத்தை கிராமத்தைச் சேர்ந்த விநாயகமூர்த்தி தேவரூபன் (வயது 29) எனும் இரு பிள்ளைகளின் தந்தையே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர், இரு திருமணங்கள் முடித்து வாழ்ந்து வந்த நிலையில் இரு தினங்களாகக் காணாமல் போயிருந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் காணாமல் போனவரை தேடிவந்த சந்தர்ப்பத்தில், இன்று காலை குறித்த கற்குவாரியின் குடிசையொன்றில் வெட்டுக்காயங்களுடன் காணாமல் போனவர் சடலமாகக் கிடப்பதை கண்ட உறவினர்கள் பொலிஸாருக்கும் குறித்த பிரிவின் கிராம உத்தியோகத்தருக்கும் தகவலை வழங்கியுள்ளனர்.

இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த அக்கரைப்பற்று பொலிஸார் சடலத்தை மீட்டதுடன் முதற்கட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்டவரின் மோட்டார் சைக்கிள்,  குறித்த குடிசைக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன் அவரது தலைபாதுகாப்பு கவசம் உள்ளிட்ட பொருள்களும் சடலத்துக்கு அருகில் காணப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .