2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

'வட்டமடு காணியில் விவசாயம் செய்ய தடைவிதிப்பது கண்டிக்கத்தது'

Kogilavani   / 2016 மார்ச் 27 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜமால்டீன், ரீ.கே.றஹ்மத்துல்லா

 நல்லாட்சியைக் கொண்டுவருவதற்கு பக்கபலமாவிருந்த முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை அரசாங்கம் கண்டு கொள்ளாமல்  இருந்து வருவது ஏமாற்றம் அளிப்பதாக வட்டமடு விவசாய அமைப்புக்களின் தலைவர் எம்.ஏ.எம். றகீஸ் தெரிவித்தார்.

'வட்டமடு விவசாய காணிகளில் விவசாயம் செய்வதற்கு வனபரிபாலன திணைக்களம் தடைவிதிப்பது கண்டிக்கத்தக்கது' என வட்டமடு விவசாயிகள் தெரிவித்தனர்.

வட்டமடு விவசாய அமைப்புக்கள் இணைந்து சனிக்கிழமை(26) முற்பகல் அக்கரைப்பற்று ரி.எவ்.சி.ஹோட்டலில் நடத்திய பத்திரிகையாளர் மா நாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது கருத் தெரிவித்த விவசாயிகள், 'திருக்கோவில் பிரதேச செயலகத்துக்குட்பட்ட வட்டமடு பிரதேசத்தில் அப்பிரதேச ஏழை விவசாயிகளாகிய நாங்கள், 1970 ஆண்டு தொடக்கம் 2013ஆம் ஆண்டுவரை நிம்மதியாக சுமூகமானமுறையில் விவசாயம் செய்து வருகின்றோம்.

இக்காணிகளுக்கான வர்;த்தமானி அறிவித்தலும் உள்ளது. இக்காணிகள் அக்கரைப்பற்று கிழக்கு கமநல சேவை நிலையத்தின்கிழ் உள்ளன. இக்காணிகளுக்கான (எல்.டீ.ஓ) அனுமதிப்பத்திரமும் உள்ளது. உரமானியம் பெற்றுக்கொண்டமை, வரசெலுத்தியமை உள்ளிட்ட விவசாயம் செய்தமைக்கான சகல ஆவணங்களும் உள்ளது.

இவ்வாறு இருக்கையில் நாங்கள் கடந்த ஒருவாரமாக விவசாய நடவடிக்கைகளுக்காக எங்களது காணிகளுக்குள் சென்றால் வனபாரிபாலன உத்தியோகத்தர்;கள் எங்களை அடித்து விரட்டுகிறார்கள். என்ன என கேட்டால் இது வனபரிபாலன திணைக்களத்துக்கு உரிய காணி என கூறுகிறார்கள்.

அது 2010 ஆம்; ஆண்டு வர்;த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர். ஆனால்? இது பிழையான வர்த்தமானி அறிவித்தல். ஏனெனில் அப்பகுதி பிரதேச செயலாளர்;, கிராம நிலதாரி, பதிவுசெய்யப்பட்ட கமக்கார அமைப்புக்கள் ஆகியோரது கருத்தக்கள் பெறப்படாமல் அன்று கடமையில் இருந்த மாவட்ட வன அதிகாரி எச்.எல்.ஏ.கமகே என்பவரது பொய்யான தகவலின் அடிப்படையில் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

இது பிழையான அறிவித்தலாகும் இதனை செய்த மாவட்ட வன அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளோம் எனவும் விவசாய அமைப்பு பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

நாங்கள் இன்னும் ஓரிரு நாட்களில் வட்டமடு பிரதேசத்துக்கு விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள செல்லவுள்ளோம். எனவே எங்களை தடுக்காமல் ஒதுக்கு வனமாகக் கொண்டுவரப்பட்ட வர்;த்தமானி அறிவித்தலை இரத்து செய்ய வேண்டுமெனவும்  இவ் ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பெற்றுத்தருமறு கேட்டுக்கொண்டனர்.

இவ் ஊடகவியலாளர் மகா நாட்டில் வட்டமடு, வேப்பையடி, முறாணவட்டி, கொக்குளுவ உள்ளிட்ட விவசாய அமைப்புகளின்  பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.  

இதேவேளை,  நல்லாட்சியைக் கொண்டுவருவதற்கு பக்கபலமாவிருந்த முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை அரசாங்கம் கண்டு கொள்ளாமல்  இருந்து வருவது ஏமாற்றம் அளிப்பதாக வட்டமடு விவசாய அமைப்புக்களின் தலைவர் எம்.ஏ.எம். றகீஸ் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .