2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

வாரந்தோறும் ஆளுநர் சந்திப்பு

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2020 ஜனவரி 19 , பி.ப. 02:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத், வாராந்த மக்கள் சந்திப்பை மாவட்ட மட்டத்தில் நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளதாக, கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் அசங்க அபயவர்த்தன  தெரிவித்தார்.

அம்பாறை மாவட்ட மக்களை, வாரத்தின் முதலாம் புதன்கிழமை, அம்பாறை ஆளுநர் அலுவலகத்திலும், மட்டக்களப்பு மக்களை இரண்டாம் புதன்கிழமையும் மட்டக்களப்பு ஆளுநர் அலுவலகத்திலும், திருகோணமலை மாவட்ட மக்களை மூன்றாம் புதன்கிழமையும் திருகோணமலை ஆளுநர் அலுவலகத்திலும் சந்திக்கலாமென அறிவிக்கப்பட்டுள்ளது.

வாரத்தின் இறுதிப் புதன்கிழமை மக்கள் பிரதிநிதிகளுக்கும், அரசியல் பிரமுகர்களுக்குமென ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் கூறினார்.

பொதுமக்கள் எதிர்கொள்ளும் தங்களுடைய பிரச்சினைகளை ஆளுநரிடம் முன்வைக்கலாமென அறிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .