2021 மே 06, வியாழக்கிழமை

வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும்

Niroshini   / 2015 ஒக்டோபர் 05 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித்

அனைத்து முகாமைத்துவ உதவியாளர்கள் தொழில் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும் நேற்று ஞாயிற்றுக்கிழமை கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையின் நல்லதம்பி மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது புதிய நிருவாக குழு உறுப்பினர்களாக பின்வருவோர் தெரிவு செய்யப்பட்டனர்.

தலைவர் : ஏ.ஜி.முபாரக்

உப தலைவர் : எஸ்.திவாகரன்

செயலாளர் நாயகம் : என்.ரமணீஸ்வரன்

உள்ளக செயலாளர் : ஏ.எஸ்.எம்.முஜாஹித்,

வெளித் தொடர்பு செயலாளர் : எஸ்.சுபராஜன்

பொருளாளர் : யூ.எல்.எம்.ஜௌபர்

தவிசாளர் : ஏ.எல்.எம்.இஸ்மாயில்

உதவி தவிசாளர் : எம்.என்.எம்.பாஜில்

கணக்காய்வு குழு :

தலைவர் : எல்.ரி.சாலித்துன் ( கணக்காளர்)

அங்கத்தவர்கள் : ஜே.நிஜாமுத்தீன்

              ஏ.சி.எம்.ஹனீஸ்

              வை.எல்.மஷாஹிர்

              எம்.எச்.ஹாறூன்

இதன்போது,தலைவர் அங்கு உரையாற்றுகையில்,

சங்கம் ஆரம்பிக்கப்பட்டு இரு வருடங்களில் எமது அங்கத்தவர்களின் நலன்கள் பல அடைவு மட்டங்களை தாண்டியுள்ளன. இலங்கையில் முகாமைத்துவ உதவியாளர்களுக்கென நூற்றுக்கணக்கான சங்கங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதை எமது சங்கத்தை பதிவு செய்ய சென்ற போது கண்டு ஆச்சரியப்பட வேண்டி ஏற்பட்டது.

ஆனால், அச்சங்கங்களிலுள்ளவர்கள் எமது நலனுக்காக எதை செய்துள்ளார்கள் என்று கேட்டால் அவை அனைத்தும் பூச்சியமாகவே இருக்கின்றது.

எமது சங்கத்தை ஏனைய சங்கங்களுடன் ஒப்பிட்டு பார்க்கின்ற போது எனக்கு ஆத்ம திருப்தி ஏற்படுகின்றதை யாராலும் மறுக்க முடியாது என நினைக்கின்றேன்.

பதவிகளுக்காக மட்டும் சங்கங்கள் உருவாக்கப்படக்கூடாது. முகாமைத்துவ உதவியாளர்கள் ஒரு நிருவாக கட்டமைப்பின் அச்சாணி போன்றவர்கள். எமது முகாமைத்துவ உதவியாளர்களின் அனுபவம் கூட திணைக்கள தலைவர்கள் சில பிரச்சினைக்கு முடிவெடுப்பதற்கு உறுதுணையாக அமைகின்றன.

நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயற்படுவதன் ஊடாக எமது உரிமைகள் அனைத்தையும் இலகுவாக அடைந்து கொள்ளமுடியும். எதிர்காலத்தில் இச்சங்கத்தின் அங்கத்தவர் தொகைகளை அதிகரிப்பதன் மூலம் மாவட்ட இணைப்பாளர்களை நியமித்து சங்கத்தின் நடவடிக்கைகளை விஸ்தரிக்கவுள்ளேன் என்றார்.

இந்நிகழ்வில்,ஆலோசகர்களாக கிழக்கு மாகாண காணி திணைக்கள உதவி ஆணையாளர் எஸ்.கஜேந்திரன், அக்கரைப்பற்று மாநகர சபை செயலாளர் எம்.ஹபீபுர் ரஹ்மான் ஆகியோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .