Freelancer / 2026 மார்ச் 01 , பி.ப. 11:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மீதான தனது தாக்குதலை ஈரான் தீவிரப்படுத்தியுள்ளது.
இன்று (01) ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை, பாரசீக வளைகுடாவில் நிலைகொண்டுள்ள அமெரிக்காவின் பிரம்மாண்டமான ‘யு.எஸ்.எஸ். லிங்கன்’ போர்க்கப்பல் மீது நான்கு பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசித் தாக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இது மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சனிக்கிழமை டெஹ்ரானில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தின் போது, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் சக்திவாய்ந்த குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தின. இதில் 86 வயதான ஈரானின் உச்ச தலைவர் காமேனி, ஈரானின் பாதுகாப்பு அமைச்சர் அமீர் நாசர்சாதே மற்றும் ராணுவத் தளபதி முகமது பாக்பூர் ஆகியோர் கொல்லப்பட்டனர்.
இந்தத் தகவலை இன்று அதிகாலை ஈரான் உறுதிப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, ஈரானின் இடைக்கால உச்ச தலைவராக மூத்த மதகுரு அயதுல்லா அலிரேசா அராபி நியமிக்கப்பட்டுள்ளார்.
காமேனியின் மறைவுக்கு பதிலடி தரும் வகையில், இஸ்ரேல் மீதும், அமெரிக்கப் படைகள் நிலைகொண்டுள்ள டுபாய், அபுதாபி, டோஹா மற்றும் மனாமா ஆகிய நகரங்கள் மீதும் சரமாரியாக ஏவுகணைகளை ஈரான் வீசி வருகிறது. டுபாயில் உள்ள சி.ஐ.ஏ. தலைமையகம் அமைந்துள்ள கட்டடம் ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்ட காணொலி இணையத்தில் வைரலாகி வருகின்றன. (a)

1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago