2021 மே 10, திங்கட்கிழமை

விசேட நேர்முகப்பரீட்சை 27அன்றும் இடம்பெறும்: நவாஸ்

Gavitha   / 2015 நவம்பர் 22 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.கே.றஹ்மத்துல்லா

அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரிக்கு புதிய ஆசிரிய பயிலுநர்களை இணைத்துக் கொள்வதற்காக இடம்பெற்று வரும் நேர்முகப்பரீட்சைக்கு, தவிர்க்க முடியாத காரணங்களினால் சமூகமளிக்க முடியாத மாணவர்களுக்கு, விசேட நேர்முகப் பரீட்சையை எதிர்வரும் 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடத்தவுள்ளதாக கல்லூரியின் பீடாதிபதி எம்.ஐ.எம்.நவாஸ் ஞாயிற்றுக்கிழமை (22) தெரிவித்துள்ளார்.

அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரிக்கான புதிய பயிலுநர் ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை, கடந்த 18ஆம் திகதி முதல் இடமபெற்று வருகின்றது.

இடம்பெற்று வரும் இந்த நேர்முகப் பரீட்சைக்கான அழைப்புக் கடிதங்கள், தபாலில் கால தாமதமாக கிடைத்தல் அல்லது தேவையான ஆவணங்களை பெற்றுக் கொள்வதில் கால தாமதம் ஏற்பட்டிருத்தல் போன்ற காரணங்களினால், உரிய தினத்தில் நேர்முகப்பரீட்சைக்கு சமூகமளிக்க முடியாமல் போனவர்களுக்கே எதிர்வரும் 27ஆம் திகதி விஷேட நேர்முகப்பரீட்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த நேர்முகப்பரீட்சை சம்பந்தமான மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ளவதற்காக எமது விசேட கருமப்பீடத்தில் பிற்பகல் 2:00 மணி தொடக்கம் பிற்பகல் 4:00 மணி வரை 0672278882 எனும் தொலை பேசி இலக்கத்தினூடாக தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X