2021 மே 06, வியாழக்கிழமை

'வெள்ளம் வரும் முன் பாதுகாப்பு நடவடிக்கை அவசியம்'

Niroshini   / 2015 நவம்பர் 21 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா,பைஷல் இஸ்மாயில்

மழைகாலம் ஆரம்பிக்கும் முன்னர் தாழ் நிலப் பகுதிகளிலுள்ள குடியிருப்புப் பிரதேசங்கள் மற்றும் வடிகாண்களில் வெள்ள நீர் வடிந்தோடுவதற்கான முன்னேற்பாடுகளை பிரதேச சபை மேற்கொள்ள வேண்டும் என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் வெள்ள அனர்த்தம் ஏற்பாடாதவாறு முன் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பான கலந்துரையாடல் இன்று(21) அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற போதே அவர் இவ்வாறு கூறினார்.

பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். உதூமாலெப்பை, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அக்கரைப்பற்று பிராந்திய நிறைவெற்று பொறியியலாளர் கே.எல்.எம். இஸ்மாயில் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அட்டாளைச்சேனை பிரதான வீதியில் அமைக்கப்பட்டுள்ள வடிகான்கள் உரிய முறையில் நிர்மாணிக்கப்படவில்லை. இதனால், மழை நீர் வடிந்தோட முடியாதவாறு தேங்கி நிற்கும் அவலம் காணப்படுகின்றது. இதனால் பல சுகாதார சீர் கேடுகளும் நுளம்பு பெரகும் அபாயமும் காணப்படுகின்றது.

இதற்கு பொதுமக்களின் இடையூறு, ஒத்துழைப்பு இன்மையும் உள்ளதுடன் வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் பிரதேச சபை ஆகியவற்றின் அசமந்தமான போக்கும் இந்நிலைமைக்கு காரணமாக உள்ளன.

இதேவேளை, பிரதான வீதயில் அமைக்கப்பட்டுள்ள வடிகான்கள் துப்பரவு செய்யப்படாததுடன் வடிகான்களுக்கு மூடிகளும் போடப்படாத நிலைமையும் பாரிய குறைபாடாக காணப்படுகின்றது.

மக்களின் வாக்குகளின் மூலம் அரசியல் அதிகாரத்துக்கு வரும் எமக்கு, அதிகாரிகளின் ஒத்துழைப்பும் இன்றியமையாததாக உள்ளது. எம்மால் கொண்டுவரும் தீர்மானங்களை விரைவாகவும் முறையாகவும் அமுல்படுத்துவதற்கு அதிகாரிகள் பூரணமாக செயற்படுவது அவசியமாகும்.

எதிர்வரும் டிசெம்பர் மாத மழைக்கு முன்னர் வடிக்கான்களை துப்பரவு செய்து கைவிடப்பட்ட குறைவேலைகளையும் பூரணமாக முடித்து மழை நீர் வடிந்தோடுவதற்கு வழியேற்படுத்துவதுடன் வடிகான்களுக்கு மூடிகளும் போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .