2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

அம்பாறை வெள்ளத்தால் 11,500 ஹெக்டயர் நெற்பயிர்கள் நாசம்

Menaka Mookandi   / 2011 ஜனவரி 18 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 11 ஆயிரத்து 500 ஹெக்டயர் நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி அழிவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, வெள்ளத்தின் போது ஏற்பட்ட கடுமையான பீடைத் தாக்கம் காரணமாக, கணிசமான அளவு நெற்பயிர்கள் வெண்கதிர்களுடன் காணப்படுவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

மேலும், நெற்பயிர்களில் மகரந்தச் சேர்க்கை நடைபெறும் காலத்தில் மழை மற்றும் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டமையினால், பயிர்களில் மகரந்தச் சேர்க்கை இடம்பெறாமல் - அநேக இடங்களில் நெற்கதிர்கள் பதர்களாகக் காணப்படுவதாகவும், இவ்வாறான வயல்களை அறுவடை செய்வதில் பயனில்லை எனவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, நெல்வயல்களில் களைகளின் வளர்ச்சி அதிகரித்துள்ளன. அவைகளை அகற்றுவதில் விவசாயிகள் ஈடுபட்டுபட்டு வருகின்றனர். நாட்டில் இம்முறை அதிக நெல் அறுவடை எதிர்பார்க்கப்பட்ட 06 மாவட்டங்களில் அம்பாறையும் ஒன்றாகும்.

அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலிருந்து நாட்டின் 22 வீதமான நெல் உத்பத்தி பெறப்படுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

நாட்டில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக இம்முறை நாடளாவிய ரீதியில் எதிர்பார்க்கப்பட்ட நெல் அறுவடையில் 14.5 வீதம் குறைவடையுமெனக் கூறப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X