2021 மே 12, புதன்கிழமை

அம்பாறை மாவட்டத்திற்கு 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் 43.41 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு

Super User   / 2011 செப்டெம்பர் 28 , பி.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சி.அன்சார்)

அம்பாறை மாவட்டத்திற்கு 14 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்ட நிதியிலிருந்து 2011ஆம் ஆண்டிற்காக 43.41 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா, நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.சி.பைசால் காசீம், சரத் வீரசேகர, சிறியாணி விஜேவிக்கிரம ஆகியோர்கள்  தலா 5 மில்லியன் ரூபாவும், சிரேஷ்ட அமைச்சர் பீ.தயாரட்ன 498,0000 ரூபாவும், நாடாளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ் மற்றும் பீ.எச்.பியசேன ஆகியோர் முறையே 495,0000 ரூபாவும், 463,0000 ரூபாவும் ஒதுக்கீடு செய்துள்ளனர்.

இதேவேளை, தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களான அனோமா கமகே 402,4000 ரூபாவும், எம்.ஏ.சுமந்திரன் 368,000 ரூபாவும், அநுர குமார திசாநாயக்கா 450,000 ரூபாவும், எல்லாவல மேதானந்த தேரர் 330,000 ரூபாவும், டி.எம்.சுவாமிநாதன் 200,000 ரூபாவும், டியூ குணசேகர 100,000 ரூபாவும், ஏ.எச்.எம்.அஸ்வர் 75,000 ரூபாவும் அம்பாறை மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்துள்ளனர்கள்.

அம்பாறை மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள 604 திட்டங்களுக்கு இந்நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.அன்வர்தீன் தெரிவித்தார்.


  Comments - 0

 • சிறாஜ் Thursday, 29 September 2011 03:46 AM

  இவ்வளவும் அண்ணன், தம்பி, மச்சான், மச்சினன், மாமா, மருமகன், மாமனார், சகலன் என்று கொடுக்காமல் சரியான முறையில் சேவை செய்ய பயன்படுத்துங்கள் இல்லையேல் ஒவ்வொன்றாக இங்கு தருவேன் நான்.

  Reply : 0       0

  meenavan Thursday, 29 September 2011 07:01 AM

  அபிவிருத்திக்கான 604 திட்டங்களுள் நடைபெறவுள்ள தேர்தல் செலவுகளும் அடங்குமா? தேர்தல் செலவுடன் திட்டங்களும் நின்று விடுமா? திட்டமொன்றுக்கு சராசரி ரூபா 72000/= இத்தொகையில் என்ன திட்டம் நிறைவேறும்? பணிப்பாளருக்கு இது வெளிச்சம்?

  Reply : 0       0

  ihjas Friday, 30 September 2011 08:00 AM

  ஏன் இந்த நாடாளுமன்ற உறுப்பினர் லிஸ்ட்ல முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் ஹசன் அலி இல்லையா ?............

  Reply : 0       0

  Sahuni Friday, 30 September 2011 05:29 PM

  தம்பி மீனவரே ௬௦௪ திட்டங்களுள் தேர்தலும் ஒன்றுதானப்பு.

  Reply : 0       0

  Sahuni Friday, 30 September 2011 05:33 PM

  தம்பி இஜாஸ் இவங்களெல்லாம் ஊருக்கு எதோ செய்ய நெனச்சாலும் அவர் எதுமே செய்ய மாட்டார்.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .