2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

ஒலுவில் துறைமுகம் செப். 15 இல் இலங்கை அரசிடம் கையளிக்கப்படும்

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 23 , பி.ப. 01:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அம்பாறை ஒலுவில் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுவரும் மீன்பிடித் துறைமுகத்தின் நிர்மாணப்பணிகள் பூர்த்தியடையும் நிலையை எட்டியுள்ளதையடுத்து அது, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படுமென துறைமுகம் நிர்மாணப்பணிகளை மேற்கொண்டு வரும் டென்மார்க்கின் கட்டுமான நிறுவனத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

டென்மார்க் அரசினால் 46.1 மில்லியன் யூரோ செலவில் நிர்மாணிக்கப்பட்ட இத்துறைமுக நிர்மாண பணிகள் 2008 மேமாதம்  ஆரம்பிக்கப்பட்டது. 56 ஹெக்டேயர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இத்துறைமுகம் மீன்பிடித் துறைமுகத்தையும் வர்த்தக கட்டிடத் தொகுதியையும் கொண்டது.


330 மீற்றர் நீளமான இவ்வர்த்தக கட்டிடத்தொகுதி 08 மீற்றர் ஆழமான கப்பல் சரக்கு இறக்குமிடத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. மீன் குளிரூட்டும் வசதி மற்றும் நவீன வசதிகளையும் இம் மீன் பிடித்துறைமுகம் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--