2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

161 மில்லியன் நிதி ஒதுக்கீடு

Kanagaraj   / 2014 ஏப்ரல் 24 , மு.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எல்.அப்துல் அஸீஸ், எஸ்.எம்.எம் றம்சான்

பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் கல்முனை தொகுதி அபிவிருத்திக்காக இவ்வருடம் 161 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக புதன்கிழமை (23) மாலை கல்முனைப் பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்ற கல்முனைப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போது அறிவிக்கப்பட்டது.

மேலும் கடந்த வருட அபிவிருத்தி வேலை திட்டங்களின் முன்னேற்றங்கள் பற்றி ஆராயப்பட்டதுடன், தற்போது  மேற்கொள்ளப்படவுள்ள பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்வானது பிரதேச செயலாளர் ஜ.எம்.ஹனீபாவின்  இணைப்பில் கல்முனைப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எம்.ஜெமீல், சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன்,  கல்முனை மாநகர ஆணையாளர்  ஜெ.லியாக்கத்தலி, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.அன்வர்தீன், பிரதிப் பணிப்பாளர் ரீ.மோகனகுமார் உட்பட  கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள், திணைக்களத் தலைவர்கள், அரச உயரதிகாரிகள் என பலரும் இதில்  கலந்து கொண்டனர்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .