2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

சம்பளம் வழங்கப்படாததால் இ.போ.ச ஊழியர்கள் வேலை நிறுத்தம்

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 18 , பி.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

கடந்த இரண்டு மாதகாலமாக சம்பளம் வழங்கப்படாமையினால் அம்பாறை, தெஹியத்த கண்டிய இ.போ.ச ஊழியர்கள் கடந்த திங்கட்கிழமை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வேலை நிறுத்தத்தில் இ.போ.ச தெஹியத்த கண்டிய டிப்போவைச் சேர்ந்த 158 ஊழியர்களும் உத்தியோகத்தர்களும் ஈடுபட்டுள்ளனர்.

கணக்காளர் சம்பளப் பணத்தை கட்டம் கட்டமாக தருவதற்கு இணங்கியபோது முழு சம்பளப் பணத்தையும் தரும்படி கோரியே இந்த வேலை நிறுத்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த வேலை நிறுத்தத்தினால் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் க.பொ.த (உ/த) பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களும் அரச அலுவலகம் மற்றும் தனியார்துறை உத்தியோகத்தர்களும் ஊழியர்களும் பொதுமக்களும் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--