2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

அம்பாறை விமான நிலையத்தை புனரமைக்க நடவடிக்கை

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 18 , பி.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

அம்பாறையில் அமைந்துள்ள விமான நிலையத்தினை புனருத்தானம் செய்து மீண்டும் இயங்கக்கூடிய நிலைமைக்கு கொண்டு வருவதற்கு துறைமுகங்கள் மற்றும் விமான சேவை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த 30 வருடங்களாக எமது நாட்டில் நிலவிய யுத்த சூழ்நிலை காரணமாக  உள்ளுர் விமான சேவையை நடத்திச் செல்வதில் பல்வேறு வகையான சிக்கல்களும் பாதுகாப்புப் பிரச்சினையும் ஏற்பட்டது.

தற்போது நாட்டில் சுமூகமான நிலமை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களின் போக்குவரத்து சேவையினை இலகுபடுத்தும் நோக்கில்  இச்செயல் திட்டம் முன்னெடுத்துச் செல்லப்படவுள்ளது.

இதேவேளை, வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள திருகோணமலை, பலாலி, மட்டக்களப்பு போன்ற விமான நிலையங்களையும் துரிதகதியில் அபிவிருத்தி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X