Freelancer / 2025 டிசெம்பர் 28 , மு.ப. 07:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
தாய்லாந்து - கம்போடியா இடையே உடன் அமுலாகும் வகையில் போர் நிறுத்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இருநாட்டு பாதுகாப்பு அமைச்சர்களும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நாட்டு நேரப்படி நேற்று மாலை 05 மணி முதல் தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே 72 மணித்தியால போர் நிறுத்தம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
தாய்லாந்தினால் சிறை பிடிக்கப்பட்ட 18 கம்போடிய வீரர்கள் விடுவிக்கப்படுவார்கள் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரு நாடுகளின் எல்லையில் நீடித்த இராணுவ மோதல்களினால் இதுவரை 41 பேர் உயிரிழந்ததுடன், மில்லியன் கணக்கானோர் இடம்பெயர்ந்தனர்.
இந்நிலையில் எல்லைப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மீண்டும் வீடு திரும்புவதற்கு இருநாட்டு இராணுவத்தினரும் இணக்கம் தெரிவித்துள்ளனர்..
கம்போடியாவிடமுள்ள தமது நாட்டின் பிராந்தியங்களை மீள கைப்பற்றும் நோக்கில் புதிய தாக்குதல்களை தாய்லாந்து இராணுவம் ஆரம்பித்திருந்தது.
அமெரிக்க ஜனாதிபதி உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் மோதல்களை நிறுத்துவதற்கு முயற்சித்த போதும் அவை தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது. (a)

46 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago