Menaka Mookandi / 2010 செப்டெம்பர் 09 , மு.ப. 04:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஆர்.அனுருத்தன்)
அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்த அம்பாறை மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேனவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
நேற்று நாடாளுமன்றத்தில் அரசியலமைப்பின் 18ஆவது திருத்தம் முன்வைக்கப்பட்ட போது அதற்கு அதரவு அளித்தமை தொடர்பாகவே அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
இத்திருத்தத்தை எதிரத்து வாக்களிப்பது என கடந்த திங்கட்கிழமை கூடிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இதன்போது இத்தீர்மானத்தை குறித்த நாடாளுமன்ற உறுப்பினரும் எற்றுக்கொண்டார்.
இருப்பினும், அவர் அதனை மீறும் வகையில் அவர் நடந்து கொண்டதாகவும் ,இது தொடர்பாக ஒழுக்காற்று நடவடிக்கை கடிதம் அவருக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் மாவை சேனாதிராஜா எம்.பி மேலும் குறிப்பிட்டார்.
2 minute ago
10 minute ago
14 minute ago
16 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
10 minute ago
14 minute ago
16 minute ago