2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

தென்கிழக்குப் பல்கலை பட்டமளிப்பு விழா அடுத்த மாதம்

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 16 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.அப்துல் அஸீஸ்)

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஆறாவது பட்டமளிப்பு விழா எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஏழாம் திகதி மு.ப.9.00 மணிக்கு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயில் தலைமையில் இரண்டு அமர்வுகளைக் கொண்டதாக இடம்பெறவுள்ள இந்தப் பட்டமளிப்பு விழாவானது, உள்வாரியாக பட்டம் பெற்ற மாணவர்களுக்கு காலையிலும் வெளிவாரியாக பட்டம் பெற்ற மாணவர்களுக்கு மாலையிலும் இடம்பெறவுள்ளது.

இந்த விழாவுக்கு பிரதம அதிதியாக  இந்தியாவின் மருத்துவப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி மயில்வாகன் நடராஜன், தமிழ்நாடு அன்னை திரேசா பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி அருணா சிவகாமி ஆகியோர்கள் கலந்து கொள்ள உள்ளதாக பல்கலைக்கழகத்தின் பதில் பதிவாளர் மன்சூர் ஏ.காதிர் தெரிவித்தார்.

 
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--