2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

மூன்று நாள் வதிவிடப்பயிற்சி நெறி

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 03 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எல்.ஏ.அஸீஸ்)

திறன் விருத்தியூடாக இன உறவுகளை கட்டியெழுப்புதல் எனும் தலைப்பிலான மூன்று நாள் வதிவிடப்பயிற்சி நெறியொன்று அம்பேபுஸ்ஸ பிரதேசத்தின் தோளன்கமுவ, கிறீன் சென்டர் நிறுவனத்தில் இடம்பெற்றது.

சம்மாந்துறை பிரதேசத்தின் வீரச்சோலை, கணபதிபுரம், மஜீத்புரம் ஆகிய கிராமங்களை சேர்ந்த மூவின இளைஞர், யுவதிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த வதிவிடப் பயிற்சி நெறியினை ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்ட நிதி உதவியின் ஊடாக, சமூக அபிவிருத்திக்கான முன்னெடுப்பு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.

ஐக்கியநாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்ட தலைமை அலுவலக நிகழ்ச்சித்திட்ட உத்தியோகஸ்தர் தரங்கா டீ.சில்வா, சமூக அபிவிருத்திக்கான முன்னெடுப்பு நிறுவனத்தின் தவிசாளர் ஏ.ஜீ.எம்.அஸ்ரி ஆகியோர்கள் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த பயிற்சி நெறியில் திறன் விருத்தி துறைசார்ந்த வளவாளர்கள் பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .