2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

கல்முனை வலயத்தில் ஆசிரியர் தின நிகழ்வுகள்

Super User   / 2010 ஒக்டோபர் 07 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

உலக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கல்முனை விவேகானந்தா வித்தியாலயம் மற்றும் கல்முனை அல் மிஸ்பாஹ் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் ஆசிரியர் தின நிகழ்வுகள் நேற்று நடைபெற்றன.

விவேகானந்தா தமிழ் வித்தியாலய மாணவர்கள் அதிபர் கே.திருநாமம் உட்பட ஆசிரியர்களுக்கு வெற்றிலை கொடுத்து கௌரவித்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டதுடன், ஆசிரியர்களுக்கு இனிப்புப் பண்டமும் கொடுத்தனர்.

இதேவேளை, அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற ஆசிரியர் தின நிகழ்வில், ஆசிரியர்களுக்கிடையில் பல விளையாட்டுப் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .